தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

கைலாசநாதர் திருக்கோவில், சிவப்பள்ளி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சிவப்பள்ளி
இறைவன் பெயர்கைலாசநாதர்
இறைவி பெயர்பார்வதி
பதிகம்அப்பர் (6-71-1)
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலையில் செம்பொனார்கோவில் கீழ்முக்கூட்டு ரோடு அடைந்து அங்கிருந்து இடதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சற்று தூரம் சென்றால் முதலில் அங்காளம்மன் கோவில் வரும். மேலும் சிறிது தூரம் நேரே செல்ல சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை அடையலாம். (கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும்)
ஆலய முகவரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
திருசெம்பள்ளி, செம்பனார்கோவில் அஞ்சல்
மயிலாடுதுறை வழி
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609309

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜைமட்டும் நடைபெறுகிறது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
ஆலய அர்ச்சகர்: - பிச்சுமணி குருக்கள்
கைபேசி: 04362 81134

தட்சன் செய்யும் யாகத்திற்கு உமையம்மை கைலாயத்தில் இருந்து வந்தபோது முருகனும் உடன் வந்ததாகவும், அங்கு தட்சனால் அவமானப்படுத்தப்பட்ட உமை கோபித்துக் கொண்டு செல்ல, முருகன் இங்கு தங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. வீரபத்திரர் இவ்வழியாகச் சென்றதாகக் கூறுகின்றனர். இவ்வாலயத்தில் வீரபத்திரருக்கு தனி சிலை உள்ளது. வீரபத்தரரின் சிரசில் சிவலிங்கமும் திருவடியின் கீழ் தட்சன் உருவமும் காட்சி தர, கையில் வாளேந்தி வீரபத்திரர் காட்சியளிக்கின்றார். இங்கிருந்து தெற்கே சுமார் 5 கி. மீ. தொலைவில் திருப்பறியலூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. தட்சனைச் சம்ஹரித்த வீரட்டத் தலம்.

சிவப்பள்ளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "பள்ளி" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது

பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார்
கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி
செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப்பாரே.

பொழிப்புரை :	www.thevaaram.org
மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு 
சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் 
மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி, புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் 
பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமை மிகக் காப்பாராவார்.

சிவப்பள்ளி கைலாசநாதர் திருக்கோவில் ஆலயம் புகைப்படங்கள்

சுப்பிரமணியசுவாமி ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் உள் தோற்றம்

வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்

கைலாசநாதர் சந்நிதி

பார்வதி தேவி சந்நிதி

வீரபத்திரர்