Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தமிழ்நாடு சிவன் கோயில்கள் - இருப்பிட விபரங்கள் ...

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 274 சிவஸ்தலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 264 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 264 கோவில்களிலும் 190 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன. இவை காவிரியின் வடகரையில் 63ம், காவிரியின் தென்கரையில் 127ம் ஆக 190 சிவஸ்தலங்கள். மற்ற 74 சிவஸ்தலங்களில் பாண்டிய நாட்டில் 14, கொங்கு நாட்டில் 7, தொண்டை நாட்டில் 31, நடு நாட்டில் 22 ஆக அமைந்துள்ளன.

பூகோள அமைப்புப் படி தல இருப்பிட விபரங்கள்No.
சோழநாடு (காவிரி வடகரை ஸ்தலம்)63
சோழநாடு (காவிரி தென்கரை ஸ்தலம்)127
பாண்டிய நாடு14
நடு நாடு22
தொண்டை நாடு31
கொங்கு நாடு7


தமிழ்நாட்டில் உள்ள 264 சிவஸ்தலங்கள் போக மீதியுள்ள 10 சிவஸ்தலங்கள் இந்தியாவில் மற்ற இடங்களிலும், இலங்கையிலும் அமைந்துள்ளன.

கேரள மாநிலம் ( மலைநாடு ) - 1
ஆந்திரா மாநிலம் - ( தொண்டை நாட்டின் ஒரு பகுதி ) - 1
கர்நாடகா மாநிலம் ( துளுவநாடு ) - 1
இலங்கை ( ஈழநாடு ) - 2 மற்றும்
வட இந்தியா ( வடநாடு ) - 5