ஞானபரமேஸ்வரர் கோவில், திருநாலூர் மயானம்
தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருநாலூர் மயானம் |
இறைவன் பெயர் | ஞானபரமேஸ்வரர் |
இறைவி பெயர் | ஞானாம்பிகை, பெரியநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இவ்வூர் ஒரு தேவார வைப்புத் தலம். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம் திருமெய்ஞானம் திருச்சேறை அஞ்சல் கும்பகோணம் வட்டம் நஞ்சாவூர் மாவட்டம் PIN - 612605 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும். மற்ற நேரங்களில் கோவில் அருகில் வசிக்கும் திரு கலியமூர்த்தி (கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்) குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தரிசிக்கலாம். கைபேசி: 9486767962, 7502056284 |