Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Fourth Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 110/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 23637212, 9382872358

108 வைணவத் தலங்களைப் பற்றிய ஒரு வழிகாட்டி என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். விலை ரூபாய் 110/- மட்டுமே. திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், அபிமானத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சிவஸ்தலம் இருப்பிடம்இறைவன் பெயர்
1.திருவாட்போக்கிரத்தினகிரிநாதர்
2.திருகடம்பந்துறைகடம்பவனேஸ்வரர்
3.திருப்பராய்த்துறைபராய்த்துறை நாதர்
4.திருகற்குடிஉஜ்ஜீவ நாதர்
5.திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)பஞ்சவர்னேஸ்வரர்
6.திருச்சிராப்பள்ளிதாயுமானவர்
7.திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)எறும்பீசர்
8.திருநெடுங்களம்நித்யசுந்தரேஸ்ரர்
9.மேலை திருக்காட்டுப்பள்ளிஅக்னீஸ்வரர்
10.திருவாலம்பொழில்ஆத்மநாதேஸ்வரர்
11.திருபூந்துருத்திபுஷ்பவன நாதர்
12.திருக்கண்டியூர்பிரம்மசிரகண்டீசர்
13.திருசோற்றுத்துறைதொலையாச்செல்வர்
14.திருவேதிகுடிவேதபுரீஸ்வரர்
15.திருதென்குடித்திட்டைவசிஷ்டேஸ்வரர்
16.திருபுள்ளமங்கைஆலந்துறை நாதர்
17.திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)சக்ரவாகேஸ்வரர்
18.திருக்கருகாவூர்முல்லைவன நாதர்
19.திருப்பாலைத்துறைபாலைவன நாதர்
20.திருநல்லூர்பஞ்சவர்ணேஸ்வரர்
21.ஆவூர் பசுபதீச்சரம்பசுபதீஸ்வரர்
22.திருசத்திமுற்றம்சிவகொழுந்தீசர்
23.திருபட்டீச்சரம்தேனுபுரீஸ்வரர்
24.பழையாறை வடதளிசோமேஸ்வரர்
25.திருவலஞ்சுழிகற்பகநாதர்
26.திருக்குடமூக்கு (கும்பகோனம்)கும்பேஸ்வரர்
27.திருக்குடந்தை கீழ்கோட்டம்நாகேஸ்வரசுவாமி
28.திருக்குடந்தைக் காரோணம்காசி விஸ்வநாதர்
29.திருநாகேஸ்வரம்சண்பக ஆரண்யேஸ்வரர்
30.திருவிடைமருதூர்மஹாலிங்கேஸ்வரர்
31.தென்குரங்காடுதுறைஆபத்சகாயநாதர்
32.திருநீலக்குடிநீலகண்டேஸ்வரர்
33.திருவைகல் மாடக்கோவில்வைகல் நாதர்
34.திருநல்லம்உமாமஹேஸ்வரர்
35.திருக்கோழம்பம்கோகிலேஸ்வரர்
36.திருவாவடுதுறைமாசிலாமனி ஈஸ்வரர்
37.திருத்துருத்தி (குத்தாலம்)உக்தவேதீஸ்வரர்
38.திருவழுந்தூர்வேதபுரீஸ்வரர்
39.மயிலாடுதுறைமயூரநாதர்
40.திருவிளநகர்துறைகாட்டும் வள்ளலார்
41.திருப்பறியலூர் (பரசலூர்)வீரட்டேஸ்வரர்
42.திருசெம்பொன்பள்ளிசுவர்ணபுரீசர்
43.திருநனிபள்ளி (புஞ்ஜை)நற்றுணையப்பர்
44.திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)வலம்புரநாதர்
45.திருதலைச்சங்காடுசங்காரண்யேஸ்வரர்
46.திருஆக்கூர்தான்தோன்றியப்பர்
47.திருக்கடவூர்அமிர்தகடேஸ்வரர்
48.திருக்கடவூர் மயானம்பிரம்மபுரீஸ்வரர்
49.திருவேட்டக்குடிதிருமேனிஅழகர்
50.திருதெளிச்சேரி (கோயில்பத்து)பார்வதீஸ்வரர்
51.திருதர்மபுரம்யாழ்மூரிநாதர்
52.திருநள்ளாறுதர்பாரண்யேஸ்வரர்
53.திருக்கோட்டாறுஐராவதேஸ்வரர்
54.அம்பர் பெருந்திருக்கோவில்பிரம்மபுரீசர்
55.அம்பர் மாகாளம்மாகாளநாதர்
56.திருமீயச்சூர்மேகநாதசுவாமி
57.திருமீயச்சூர் இளங்கோவில்சகலபுவனேஸ்வரர்
58.திருதிலதைப்பதிமதிமுத்தீஸ்வரர்
59.திருப்பாம்புரம்பாம்பு புரேஸ்வரர்
60.சிறுகுடிசூட்சுமபுரீஸ்வரர்
61.திருவீழிமிழிலைநேத்ரார்பனேஸ்வரர்
62.திருவன்னியூர்அக்னீஸ்வரர்
63.திருக்கருவிலிக்கொட்டிட்டைசற்குனநாதேஸ்வரர்
64.திருபேணுபெருந்துறைசிவானந்தேஸ்வரர்
65.திருநறையூர்சித்தி நாதேஸ்வரர்
66.அரிசிற்கரைப்புத்தூர்சொர்ணபுரீஸ்வரர்
67.சிவபுரம்சிவபுரநாதர்
68.திருகலயநல்லூர்அமிர்தகலசநாதர்
69.திருக்கருக்குடிசற்குனலிங்கேஸ்வரர்
70.திருவாஞ்சியம்வாஞ்சிநாதர்
71.நன்னிலம்மதுவனேஸ்வரர்
72.திருகொண்டீச்சரம்பசுபதீஸ்வரர்
73.திருப்பனையூர்சௌந்தர்யநாதர்
74.திருவிற்குடிவீரட்டானேஸ்வரர்
75.திருப்புகலூர்அக்னீஸ்வரர்
76.திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்வர்த்தமானேஸ்வரர்
77.இராமனதீச்சுரம்இராமநாதசுவாமி
78.திருபயற்றூர்திருபயற்றுநாதர்
79.திருசெங்கட்டாங்குடிஉத்தராபதீஸ்வரர்
80.திருமருகல்இரத்தினகிரீஸ்வரர்
81.திருச்சாத்தமங்கைஅயவந்தீஸ்வரர்
82.நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)காயாரோகனேஸ்வரர்
83.சிக்கல்நவநீதேஸ்வரர்
84.திருக்கீழ்வேளூர்கேடிலியப்பர்
85.தேவூர்தேவபுரீஸ்வரர்
86.பள்ளியின் முக்கூடல்முக்கோண நாதேஸ்வரர்
87.திருவாரூர்வன்மீகி நாதர்
88.திருவாரூர் அரநெறிஅறனெறியப்பர்
89.ஆரூர் பறவையுன்மண்டளிதூவாய் நாயனார்
90.திருவிளமர்பதஞ்சலி மனோஹரர்
91.திருக்கரவீரம்கரவீரநாதர்
92.திருப்பெருவேளுர்அபிமுக்தீஸ்வரர்
93.திருதலையாலங்காடுஆடவல்லீஸ்வரர்
94.திருக்குடவாயில்கோனேஸ்வரர்
95.திருச்சேறைசெந்நெறியப்பர்
96.திருநாலூர் மயானம்ஞானபரமேஸ்வரர்
97.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்சொர்ணபுரீசுவரர்
98.திருஇரும்பூளை (ஆலங்குடி)ஆபத்சகாயேஸ்வரர்
99.திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)பாதாளேஸ்வரர்
100.திருஅவளிவநல்லூர்சாட்சி நாநர்
101.திருப்பரிதிநியமம்பரிதியப்பர்
102.திருவெண்ணியூர்வெண்ணிக்கரும்பர்
103.திருப்பூவனூர்புஷ்பவனநாதர்
104.திருப்பாதாளீச்சரம்சர்ப்ப புரீஸ்வரர்
105.திருக்களர்பாரிஜாதவனேஸ்வரர்
106.திருசிற்றேமம்பொன்வைத்த நாதேஸ்வரர்
107.திருவுசத்தானம்மந்திர புரீஸ்வரர்
108.திருஇடும்பாவனம்சற்குனநாதேஸ்வரர்
109.திருக்கடிக்குளம்கற்பகநாதர்
110.திருத்தண்டலை நீணெறிநீணெறிநாதர்
111.திருக்கோட்டூர்கொழுந்தீசர்
112.திருவெண்டுறைவெண்டுறைநாதர்
113.திருக்கொள்ளம்புதூர்வில்வவனேஸ்வரர்
114.திருப்பேரெயில்ஜகதீஸ்வரர்
115.திருக்கொள்ளிக்காடுஅக்னீஸ்வரர்
116.திருதெங்கூர்வெள்ளிமலைநாதர்
117.திருநெல்லிக்காநெல்லிவனேஸ்வரர்
118.திருநாட்டியாத்தான்குடிமாணிக்கவண்ணர்
119.திருக்காறாயில்கண்ணாயிரநாதர்
120.திருகன்றாப்பூர்நடுதறியப்பர்
121.திருவலிவலம்மனத்துனைநாதர்
122.திருகைச்சினம்கைசின நாதேஸ்வரர்
123.திருக்கோளிலிகோளிலிநாதர்
124.திருவாய்மூர்வாய்மூர்நாதர்
125.திருமறைக்காடு (வேதாரண்யம்)மறைக்காட்டு மணாளர்
126.அகத்தியான்பள்ளிஅகஸ்தீஸ்வரர்
127.கோடியக்கரைஅமிர்தகடேஸ்வரர்

இத்தலங்கள் யாவும தமிழ்நாட்டிலுள்ள கரூர், திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் முதலிய மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள காரைக்கால் வட்டத்திலும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.

கரூர் மாவட்டம் (2)

திருகடம்பந்துறை, திருப்பராய்த்துறை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (6)

திருவாட்போக்கி, திருகற்குடி, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருஎறும்பியூர், திருநெடுங்களம்

தஞ்சாவூர் மாவட்டம் (35)

மேலை திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருபூந்துருத்தி, திருக்கண்டியூர், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருதென்குடித்திட்டை, திருபுள்ளமங்கை, திருசக்கரப்பள்ளி, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, ஆவூர் பசுபதீச்சரம், திருபட்டீச்சரம், திருசத்திமுற்றம், பழையாறை வடதளி, திருவலஞ்சுழி, திருக்குடமூக்கு, திருக்குடந்தை கீழ்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, திருவைகல் மாடக்கோவில், திருநல்லம், திருக்கோழம்பம், கருவிலிக்கொட்டிட்டை, திருபேணுபெருந்துறை, திருநறையூர், அரிசிற்கரைப்புத்தூர், சிவபுரம், திருகலயநல்லூர், திருக்கருக்குடி, திருச்சேறை, திருப்பரிதிநியமம்

நாகப்பட்டிணம் மாவட்டம் (21)

திருவாவடுதுறை, திருத்துருத்தி, திருவழுந்தூர், மயிலாடுதுறை, திருவிளநகர், திருப்பறியலூர், திருசெம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, திருவலம்புரம், திருதலைச்சங்காடு, திருஆக்கூர், திருக்கடவூர், திருக்கடவூர் மயானம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம், திருசெங்கட்டாங்குடி, திருமருகல், நாகைக் காரோணம், சிக்கல், திருக்கீழ்வேளூர், தேவூர்,

புதுவை மாநிலம் (4)

திருவேட்டக்குடி, திருதெளிச்சேரி, திருதர்மபுரம், திருநள்ளாறு

திருவாரூர் மாவட்டம் (59)

திருநல்லூர், திருக்கோட்டாறு, அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருமீயச்சூர் இளங்கோவில், திருதிலதைப்பதி, திருப்பாம்புரம், சிறுகுடி, திருவீழிமிழிலை, திருவன்னியூர், திருவாஞ்சியம், நன்னிலம், திருகொண்டீச்சரம், திருப்பனையூர், திருவிற்குடி, இராமனதீச்சுரம், திருபயற்றூர், திருச்சாத்தமங்கை, பள்ளியின் முக்கூடல், திருவாரூர், திருவாரூர் அரநெறி, ஆரூர் பறவையுன்மண்டளி, திருவிளமர், திருக்கரவீரம், திருப்பெருவேளுர், திருதலையாலங்காடு, திருக்குடவாயில், திருநாலூர் மயானம், கடுவாய்க்கரைப்புத்தூர், திருஇரும்பூளை, திருஅரதைப் பெரும்பாழி, திருஅவளிவநல்லூர், திருவெண்ணியூர், திருப்பூவனூர், திருப்பாதாளீச்சரம், திருக்களர், திருசிற்றேமம், திருவுசத்தானம், திருஇடும்பாவனம், திருக்கடிக்குளம், திருத்தண்டலை நீணெறி, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருக்கொள்ளம்புதூர், திருப்பேரெயில், திருக்கொள்ளிக்காடு, திருதெங்கூர், திருநெல்லிக்கா, திருநாட்டியாத்தான்குடி, திருக்காறாயில், திருகன்றாப்பூர், திருவலிவலம், திருகைச்சினம், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடியக்கரை


பஞ்ச பூதத் தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.

  1. காஞ்சீபுரம்
  2. திருவானைக்கா
  3. திருவண்ணாமலை
  4. சிதம்பரம்
  5. திருக்காளத்தி

இவற்றில் திருக்காளத்தியைத் தவிர மற்ற நான்கு தலங்களும் தமிழ்நாட்டிலுள்ளன. திருக்காளத்தி ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

பஞ்ச சபைத் தலங்கள்
இறைவன் நடராசர் உருவத்தில் அருட்கூத்து ஆடுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து தலங்களைக் குறிப்பிடுவர். அந்த ஐந்து சபைகள் அமைந்துள்ள இடங்கள் (சிவாலயங்கள்) இவையாகும்
  1. தில்லை(சிதம்பரம்) - கனக சபை
  2. திருவாலங்காடு - இரத்தின சபை
  3. மதுரை - வெள்ளி சபை
  4. திருநெல்வேலி - தாமிர சபை
  5. திருக்குற்றாலம் - சித்திர சபை